கத்தியைக் கொண்டு தாக்க முயன்ற நபர்: சுட்டுக்கொன்ற பொலிசார்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் பொலிஸ் அதிகாரிகளை கத்தியால் தாக்க முயன்ற நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் கோர்னெல்லா பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில், அல்ஜீரியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.

தொடர்ந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறிக்கொண்டு, மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்