கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்த பெண்: 10 மணிநேரத்திற்கு பின் மீட்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

குரேஷிய கடல் பகுதியில் பயணிகள் கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்த பெண்ணொருவர், 10 மணிநேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

நார்வே நாட்டின் வர்கரோ லாவில் இருந்து வெனிஸ் நகருக்கு பயணிகள் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பல் குரேஷிய கடல் பகுதியில் போய் கொண்டிருந்தபோது, கை லாங்ஸ்டாப் என்ற பெண் பயணி கப்பலின் கூரை மேல் ஏறியுள்ளார், அப்போது கால் தவறி கடலில் விழுந்து விட்டார்.

ஆனால், கப்பலில் இருந்த ஒருவரும் இதனை கவனிக்கவில்லை. லாங்ஸ்டாப் கடலில் சுமார் 10 மணிநேரமாக தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவ்வழியாக வந்த படகு ஒன்றில் இருந்த சிலர் லாங்ஸ்டாப்பை பார்த்துள்ளனர். பின்னர் உடனடியாக போராடி அவரை மீட்டனர்.

இதுகுறித்து லாங்ஸ்டாப் கூறுகையில், ‘நான் கடலில் 10 மணிநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்