தனது பிரசவத்திற்கு தானே மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்: ஆச்சர்ய சம்பவம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து பெண் அமைச்சர் ஒருவர், தனது பிரசவத்திற்காக தானே மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் போக்குவரத்துத்துறை துணை அமைச்சராக இருப்பவர் ஜூலி ஜெண்டேர்(38). கர்ப்பிணியான இவர், தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு தானே மிதிவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை ஜெண்டேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மூன்று மாதகாலம் பேறுகால விடுப்பு எடுக்க உள்ள ஜெண்டேர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணைய உள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து ஜெண்டேர் கூறுகையில் ‘இது தான் எங்களுக்கு அதிர்ஷ்டம். எங்களது காரில் பேறுகால உதவியாளருக்கான கூடுதல் இடம் இல்லாத காரணத்தினால், நானும் என்னுடைய கணவரும் மிதிவண்டியில் பயணித்தோம்.

ஆனால், அது எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது. நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்