அடக்கமாக உடைய அணியாததால் கைது செய்ய வேண்டும்: ஈரானிய பெண்ணின் ஆவேசமான செயற்பாடு

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவரின் செயற்பாடானது தற்போது இணையத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

இதற்கு காரணம் மதகுரு ஒருவரின் எரிச்சலூட்டும் செயற்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது குறித்த பெண் முறையாக உடை அணியவில்லை எனவும் அவர் ஹிஜாப்பினை முறையாக அணிய வேண்டும் அவ்வாறில்லாவிடில் கைது செய்ய வேண்டி ஏற்படும் என எச்சரித்துள்ளார் மதகுரு ஒருவர்.

இதனால் இவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண் தனது ஹிஜாப்பினை தலையில் இருந்து முழுவதுமாக கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்துவிட்டார்.

பலர் கூடியிருந்த பொது இடத்தில் குறித்த பெண்ணின் செயற்பாடானது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 40 வயதான அப்பெண்ணின் நடவடிக்கை குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்