பறக்கும் விமானத்தில் சகபயணியிடம் இளைஞர் செய்த முகம் சுழிக்கும் செயல்: அழுத பயணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த பயணி சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்காகோவிலிருந்து டோக்கியோ நோக்கி தனியார் விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் மதுபோதையில் இருந்த 24 வயது அமெரிக்க இளைஞர், தன்னுடைய இரண்டு இருக்கைக்கு முன்னால் இருந்த 50 வயதான ஜப்பான் பயணியிடம் சென்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் அந்த பயணி அதிர்ச்சியில் உறைந்து அழுதார், பின்னர் விமான ஊழியர்கள், போதையில் இருந்த இளைஞரை பிடித்து வைத்து கொண்டனர்.

விமானம் ஜப்பான் வந்ததும் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த விமான நிறுவனம் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்