எரிமலை மேல் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலாப் பயணிகள்: அதிரடியாக மீட்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

ஸ்பெனுக்கு சொந்தமான கனேரி தீவில் எரிமலை ஒன்றிற்கு மேலாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறித்த கேபிள் காரில் பயணம் செய்து எரிமலைக் காட்சியை பார்த்து மகிழ்வது வழக்கமாகும்.

இவ்வாறு நேற்றைய முன்தினம் சுமார் 150 வரையான சுற்றுலாப் பயணிகள் குறித்த கேபிள் காரில் பயணிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

இதன்போது கேபிள் அறுந்ததனால் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 4 குழந்தைகள் உட்பட 34 பேர் எரிமலைக்கு மேலாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துள்ளனர்.

ஏனையவர்கள் கேபிள் ஆரம்பிக்கும் இடத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர்.

எனினும் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்களால் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18 மாதங்களில் இரண்டாவது தடவையாக இக்கேபிள்கள் அறுந்துள்ளன.

இதன் காரணமாக தற்காலிகமாக குறித்த கேபிள் கார் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்