பதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றபோது உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

அங்கு ஜனாதிபதி மம்னூன் உசேன், இம்ரான்கானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது இம்ரான்கான் பதற்றத்துடன் காணப்பட்டார். மேலும், கண்கலங்கியபடி உறுதிமொழியை எடுத்துக் கொண்ட அவர், உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.

ஜனாதிபதி உசைன் ‘ரோஸ்-ஹெ-கியாமத்’(தீர்ப்பு நாளில்) என்று குறிப்பிட்டார். ஆனால், இம்ரான்கான் அதை சரியாக உள்வாங்காத நிலையில், அவரால் அதனை உச்சரிக்க முடியவில்லை. மேலும் அவர் கூறும்போது ’ரோஸ்-ஹெ-கியாதத்’(தலைமையின் நாளில்) என்று மாற்றிக் கூறினார்.

அதன் பின்னர் தான் கூறிய வார்த்தை தவறானது என்பதை அறிந்த இம்ரான்கான், சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கூறி சமாளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்