கேரளா வெள்ளத்துக்கு கட்டார் இளவரசர் எத்தனை மில்லியன் டொலர் உதவுகிறார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கேரள வெள்ள நிவாரண நிதியாக கட்டார் 5 மில்லியன் டொலர்களை (35 கோடி) அறிவித்துள்ளது.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் புரண்டோடுகிறது.

மழை வெள்ளம் காரணமாக 357 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பிடத்தை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அரபு நாடான கட்டார் 5 மில்லியன் டொலர்களை (35 கோடி) கேரளாவுக்கு வழங்குகிறது.

இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் சேக் அப்துல்லா பின் நசீர் பின் கலீபா அல் தானி வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்