பெண் அமைச்சருடன் நடனமாடிய ரஷ்ய ஜனாதிபதி புதின்: வெடித்த சர்ச்சை!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரின் திருமணத்திற்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், மணப்பெண்ணான அமைச்சருடன் சேர்ந்து நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் கரின் நெய்சல். இவருக்கும் தொழிலதிபரான உல்ஃப்கங் மெய்லிங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுலோவேனியாவின் தெற்கு எல்லைப் பகுதியில் மிகுந்த பாதுகாப்புடன் புதின் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்.

அப்போது மணப்பெண் நெய்சலுடன் இணைந்து புதின் நடனமாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் நடந்த கலவரத்தின் போது அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியது. அப்போது ஆஸ்திரியா ஒரு நடுநிலை இடைதரகர் போல இருந்தது. எனவே, புதினுக்கு அழைப்பு விடுத்தது ஏன் என கரின் நெய்சலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்