'தயவு செய்து என் காதலை ஏற்றுக்கொள்'.. கெஞ்சிய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணை கடத்த முயன்ற இளைஞரை சுற்றி வளைத்து பொதுமக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டில் Rio de Janeiro பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில், தனியாக அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என சக பயணிகள் கேட்கும்பொழுது, தான் அந்த பெண்ணின் காதலன் என இளைஞர் பதிலளித்துள்ளார்.

வீடியோவை காண...

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். இதற்கிடையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞர், யாரேனும் அருகில் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியவாறே, "தயவு செய்து புரிந்துகொள் நான் உன்னை காதலிக்கிறேன். என்னை விட்டு செல்லாதே" என கெஞ்சியுள்ளார்.

கையில் கத்தியிருந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக அந்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். பெரிய அளவிலான கற்கள், குச்சி, கட்டை மற்றும் குடையை கொண்டு தாக்குதல் நடத்தினர். பொதுமக்களின் தாக்குதலை தாங்காத அந்த இளைஞர் அடுத்த சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட தரையில் விழுந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்