பணத்திற்காக மகனையே வேனின் முன்பு தள்ளி விட்ட கொடூர தாய்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் மகனை வேனின் முன்பு தள்ளிவிட்டு, அதை வைத்து மிரட்டி பணம் வாங்க தாய் திட்டம் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Guangzhou மாகாணத்தில் தாய் ஒருவர் தன் மகனுடன் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது வேன் ஒன்று அந்த வழியே சென்ற போது, குறித்த பெண் தன்னுடைய மகனை வேனின் முன்பு தள்ளிவிடுகிறார்.

ஆனால் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமுமின்றி தப்பிக்க, வேன் டிரைவரும் காரை நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியுள்ளது.

மகனை வேனின் முன்பு தள்ளிவிட்டு அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதற்கே அந்த பெண் இப்படி செய்ததாகவும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்