மருத்துவமனையில் பசியால் துடித்த குழந்தை! பெண் பொலிஸ் செய்த செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் பசியால் அழுத குழந்தைக்கு பெண் பொலிசார் ஒருவர் பால் கொடுத்துள்ள சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

அர்ஜெண்டினாவின் Berisso பகுதியில் உள்ள Sister Maria Ludovica children’s hospital-ல் Celeste Ayala என்ற பெண் பொலிசார் Guard duty-யாக இருந்துள்ளார்.

அப்போது உட்டச்சத்து குறைபாடுடன் உள்ள ஆண் குழந்தை ஒன்று தொடர்ந்து அழுதுள்ளது. அங்கிருக்கும் மருத்துவர்கள் மிகவும் பிசியாக இருந்ததால், குழந்தையை கவனிக்க தவறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்களோ குழந்தை அழுக்காவும் மற்றும் ஒரு வித நாற்றத்துடனும் இருந்ததால், கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தை அழுவதைக் கண்ட Celeste Ayala உடனடியாக மருத்துவர்களிடம் சென்று அந்த குழந்தைக்கு பால் கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதன் பின் அவர் உடனடியாக குழந்தையை தூக்கி வைத்து பால் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகிதால், அந்த பெண்ணை பலரும் பாராட்டு வருகின்றனர்.

இது குறித்து Celeste Ayala கூறுகையில், குழந்தை அழுவதை பார்க்கும் போது பசியால் அழுகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அதன் பின் குழந்தைக்கு பால் கொடுக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் குழந்தை குறித்த தாய் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை, ஆனால் இந்த குழந்தை அவரின் தாய்க்கு ஏழாவது குழந்தை என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவர் குழந்தைக்கு பால் கொடுப்பது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி குறித்த புகைப்படமானது 68,000 லைக்குகளையும், 94,000 ஷேர்களையும், 300-க்கும் மேற்பட்ட கமெண்ட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்