மொடல் அழகியுடன் ஊர் சுற்றியதால் பதவியை இழந்த அமைச்சர்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நார்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் மொடல் அழகியுடன் சுற்றுலா சென்றதால் எழுந்த சர்ச்சையால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நார்வே நாட்டின் மீன் வளத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பெர் சாண்டர்பெர்க். இவர் மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் என்ற முன்னாள் மொடல் அழகியுடன் ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த விடயம் வெளியே தெரிந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல் என்றும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பெர் சாண்ட்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் எம்மா சோல்பெர்க் கூறுகையில், பெர் சாண்ட்பெர்க் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இது நல்ல முடிவுதான் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்