புற்றுநோய் பாதித்த நிலையிலும் மகளுக்காக தந்தை செய்த செயல்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

புற்றுநோய் பாதித்து மரணம் நெருங்கிய நிலையிலும் மகளின் திருமணத்தில் அவளது கரம் பற்றி அழைத்துவர விரும்பிய ஒரு தந்தை ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறே மகளின் கரம் பற்றி நடந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

பிலிப்பைன்சை சேர்ந்தவர் Pedro Villarin (65), கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தனது மகளான Charlotte Villarinஇன் திருமணத்தில் அவளது கரம் பற்றி அழைத்து வர ஆசை.

தகப்பனாரின் உடல் நிலை அறிந்த மணமக்களும் திட்டமிட்டிருந்த திருமணத்தை முன்கூட்டியே நடத்த முடிவு செய்தனர்.

ஆனால் திருமண நாளன்று சக்கர நாற்காலியில் உட்காரக்கூட Pedroவுக்கு பலமில்லை.

ஆகவே அவர் ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டவாறே தனது மகளின் கையைப் பிடித்துக் கொள்ள, உறவினர்கள் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டே வந்தார்கள்.

முடியாத நிலையிலும் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் Pedro.

கண்ணீருடன் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றினாலும் அவரது கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்ட திருப்தி Charlotteக்கு.

திருமணம் முடிந்து மூன்றாவது நாள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் கண்களை மூடினார் Pedro.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்