மரணத்தை கண்முன் பார்த்தேன்: இத்தாலி விபத்தில் உயிர் தப்பிய டிரைவர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் 39 பேரின் உயிர்களை பலி வாங்கிய பாலம் இடிந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய லொறி டிரைவரின் படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

அதேபோல் அவரது லொறிக்கு பின்னால் வந்தவர்கள் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

நான்கு குழந்தைகளின் தந்தையான 37 வயது Luigi Fiorillo, பாலம் இடிந்து விழுவதை அறிந்து சரியான நேரத்தில், சரியான தூரத்தில் தனது லொறியை நிறுத்தினார்.

அவரை பின் தொடர்ந்து வந்தவர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால் உயிர் பிழைத்தார்கள்.

இந்நிலையில் அவரது லொறியை முந்திச் சென்ற ஒரு கார் அவரது கண்களுக்கு முன்பாகவே பாலத்திலிருந்து விழுந்த காட்சியும் அரங்கேறியுள்ளது.

என்கண்களுக்கு முன்பாக மரணத்தைப் பார்த்தேன், நான் உயிர் பிழைத்ததே ஒரு அற்புதம்தான் என்று கூறும் Luigi Fiorillo, சமீபத்தில்தான் தனது நீண்ட நாள் காதலியை மணம் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்