நடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார்.

இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக இறந்து கிடப்பதாக நியூயார்க் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது.

பிணத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், பரிசோதனையில் இவர் கர்ப்பமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது,

லிரிக் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பமாக இருந்த என் மகள் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக தற்போதே கூறுவது சரி அல்ல. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவு செய்யட்டும் என்று லிரிக்கின் தந்தை டக் தெரிவித்துள்ளார்.

லிரிக் அவராக சாலையில் நடந்து சென்றபோது இறந்தாரா இல்லை ஏற்கனவே இறந்த லிரிக்கின் உடலை யாராவது அங்கு கொண்டு வந்து போட்டார்களா என்று பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers