28 வருடங்களாக பெண்ணின் கண் மடலுக்குள் மாட்டிக்கொண்ட தொடுவில்லை

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

ஸ்கொட்லான்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணியின் கண்கள் வீங்கிய நிலையில், சற்று தொங்கியதாக காணப்பட்டிருக்கின்றது.

வைத்தியர்கள் MRI மூலம் பரிசீலித்த போது கிட்டத்தட்ட 5 மில்லிமீட்டர் விட்டமுடைய நீர்க்கட்டியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை அகற்றுவதற்கென சத்திரசிகிச்சையொன்றையும் தயார்படுத்தியிருந்தனர்.

இதன்போது அந் நீர்க்கட்டி பிளந்து பதிலாக தொடுவில்லையொன்று பெறப்பட்டிருந்தது.

கடந்த தசாப்பதங்களாக அப் பெண்மணி எந்த தொடுவில்லையும் அணிந்திருக்கவில்லை, அது எவ்வாறு மாட்டிக்கொண்டது என்றும் அவர் அறிந்திருக்கவில்லை.

பின்னர் அவரது தாய் இவர் சிறுபிள்ளையாக இருக்கும் போது கண் நோயால் அவதிப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கின்றது.

இவர் 14 வயதில் பூப்பந்து விளையாடிய போது கண்ணில் அடிபட்டிருந்தார். அப்போதே இந்த வில்லையை அணிந்திருந்தார். பின்னர் அது தொலைந்து போனதாகக் கருதப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 28 வருடங்களாக அவ்வில்லை அவர் கண்களில் மாட்டியிருப்பது தெரியவந்திருக்கின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers