உலகின் சிறந்த தந்தை இவர்தான்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தனியாக தனது 5 வயது குழந்தையுடன் வசித்து வரும் தந்தையின் நெகிழ்ச்சி செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் இவர் உலகின் சிறந்த தந்தை என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த பணுதாய் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியிடம் விவாகரத்து வாங்கினார். தனது 5 வயது குழந்தையுடன் வசித்து வரும் இவர், தனது மகனை மிகச்சிறப்பாக வளர்த்து வருகிறார்.

தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பணுதாய் மகன் படித்து வரும் பள்ளியிலும் அன்னையர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

அப்போது அனைத்து அம்மாக்களும் தங்களது குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்று அருகில் இருந்தனர். தனது மகனுக்கு தாய் குறித்த ஏக்கம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த பணுதாய், தனது ஆண் உடையை மாற்றி பெண்கள் அணியும் உடையை அணிந்து தாயாக மாறி தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்று அனைத்து அம்மாக்களுடன் சேர்ந்து ஒரு அம்மாவாக அமர்ந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்தான் உலகின் சிறந்த தந்தை, இவரது இந்த செயல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்