கொழுந்துவிட்டெரியும் ஸ்வீடன்: முகமூடி இளைஞர்களால் பல மில்லியன் சேதம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்வீடனில் பல நகரங்களில் இளைஞர்கள் கும்பல் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை கொளுத்தி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ள அமைச்சர், தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திங்களன்று மாலை முதல் தொடங்கிய இந்த வெறியாட்டம் ஸ்வீடனில் உள்ள பல நகரங்களில் பரவியுள்ளது.

இதுவரை அங்குள்ள பல நகரங்களில் அந்த கும்பல் சுமார் 80 கார்களை நெருப்புக்கு இரையாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக Gothenburg, Trollhättan, Lysekil, Falkenberg, Stockholm மற்ரும் Uppsala ஆகிய நகரங்களில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுமார் 60 பேர் கொண்ட கும்பல் ஒன்று Trollhättan பகுதியில் கூடி குறித்த தாக்குதலை முன்னெடுத்ததாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஸ்வீடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கலவரம் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டமிட்ட கலவரங்களால் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய ஆய்வுக்கு பின்னர் தகவல் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் சமீப காலமாக பாலியல் பலாத்காரம், கொள்ளை, பொது சொத்தை சேதம் விளைவிப்பது, கொலை என குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 300 துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாகவும், அதில் 41 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்