மனைவி சொன்ன அந்த வார்த்தை: மனைவி, மகள் சடலத்துடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கணவர் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் இறந்து போன மனைவியும், மகளும் மீண்டும் உயிரோடு வருவார்கள் என எண்ணிய கணவர் சடலத்துடன் வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டு முன்யோகி என்பவரின் மனைவி லைடியா கடந்த 2014-ஆம் ஆண்டு காசநோய் காரணமாக இறந்துள்ளார்.

இதற்கு முந்தைய 2013-ஆம் ஆண்டில் கிட்டுவின் மகள் பட்டினியால் இறந்துள்ளார்.

இதையடுத்து இருவரின் சடலத்தையும் உடனடியாக புதைக்காத கிட்டு அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிட்டு வீட்டு அருகிலிருப்பவர்கள் மூலம் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பொலிசார் கிட்டுவை கைது செய்தனர்.

அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தான் லைடியாவும், அவர் மகளும் புதைக்கப்பட்டுள்ளனர்.

கிட்டு நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவி லைடியா, நான் இறந்து ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர் பெற்று வருவேன் என என்னிடம் கூறினார்.

அதுவரை சடலத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்குமாறும் கூறினார் என தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு பொலிசாரும் நீதிபதியும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

இதையடுத்து கிட்டுவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்