மூன்று வருடமாக காதலித்துவிட்டு பிரேக் அப் சொன்ன காதலி! ஆத்திரத்தில் காதலன் அனுப்பிய அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் மூன்று வருடமாக காதலித்துவிட்டு திடீரென்று காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத்தால், தனியாக விட்டுச் சென்ற காதலியின் ஆசை பூனையை காதலன் கொடூரமாக கொலை செய்து வீடியோவாக அனுப்பியுள்ளார்.

சீனாவின் Shenyang நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜோடி Bian-Yao. இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், Yao-வின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் உடனடியாக வீட்டை விட்டு காலி செய்து சென்றுவிட்டதாகவும், மறுநாள் வந்து தன்னுடைய பூனையை எடுத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

காதலி தன்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த காதலன், அவர் ஆசையாக வளர்த்து வந்த பூனையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அடுத்த நாள் காலை 11 மணிக்கு வருவதற்குள், 10 மணிக்கு காதலன் அவருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் பூனையை கொடூர முறையில் வெட்டி அதன் பின், அதை நெறுக்கி கொல்வது போன்று உள்ளது.

இதையடுத்து காதலி வீட்டிற்கு வந்த போது பூனை ஒரு பெட்டியில் இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அந்த நபர் மீது விலங்கு நல பாதுகாப்பு மையம் புகார் அளித்துள்ளதாகவும், பொலிசார் விசாரணையை துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்