25 வயதில் 12 வயது சிறுவன் போல் இருக்கும் இளைஞர்! கண்ணீர் வரவைக்கும் பரிதாப நிலைமை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

போலாந்து நாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் அரிய வகை நோயினால் 12 வயது சிறுவன் போல் இருந்து, அனுபவிக்கும் துன்பங்கள் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.

போலாந்து நாட்டின் Olesnica பகுதியைச் சேர்ந்தவர் Tomasz Nadolski. 25 வயது இளைஞரான இவர் பார்ப்பதற்கு 12 வயது சிறுவன் போல் தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து Tomasz Nadolski கூறுகையில், எனக்கு வயது 25 வயதாகிறது. நான் என்னுடைய வயதிற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் தினந்தோறும் என்னுடைய உடலை கண்ணாடியில் பார்க்கும் போது, நானே என்னை வெறுக்கிறேன். தன்னுடைய 7 வயதில் எனக்கு இந்த பிரச்சனை வந்தது.

அதாவது அப்போது வாந்தி எடுத்தேன். அதன் பின் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல் தவித்தேன். அதுமட்டுமின்றி என்னுடைய கை மற்றும் காலின் பாதங்களிலும் வலி ஏற்பட்டது.

இப்படி தொடர்ந்து இருந்ததால், மருத்துவர்களிடம் சென்று பார்த்தோம், ஆனால் அவர்களாலே இது என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் இருந்தது.

இதையடுத்து உடலில் எந்த பிரச்சனையும் இல்லை, மனதில் தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி இது ஒரு அரியவகை மரபணு நோய் என்று கூறினர்.

இந்த நோயின் தாக்கத்தினால் நான் என்னுடைய உறவினர்களை இழந்தேன், நான் வீட்டில் இருக்கும் போது எல்லாம் தனியாகவே என்னுடைய அறையில் இருப்பேன்.

இதுமட்டுமா நான் வெளியில் செல்லும் போது, பொலிசார் என்னை வழிமறித்தால், நான் ஐடி கார்டை காட்டுவேன், ஆனால் அவர்களோ என்னுடைய தோற்றத்தை பார்த்துவிட்டு போலியான ஐடி கார்டை வைத்து ஏமாற்றுகிறாயா என்று கூறுவார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்த நபருக்கு வந்திருக்கும் நோய் அரிய வகை மரபு நோய். Fabry disease இந்த நோயினால் கிட்னி, இதயம், தோல் போன்றவைகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பாக உடலில் இருக்கும் செல்கள் ஒரு குறிப்பிட்ட கொழுப்பை அதாவது globotriaosylceramide என்றழைக்கப்படும் ஒரு வகை பிரச்சனையாகும் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்றால் ஆண்டிற்கு £170,000(இலங்கை மதிப்பில் 34617511 கோடி ரூபாய் ) வரும்.

இதற்காக அரசாங்கத்திடமிருந்து தரப்படும் £160 தொகையை வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருதால், அவரால் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இதற்கு சிகிச்சை அளிக்க தயாரிக்கப்படும் மருந்துகளை அந்த நிறுவனம் இலவசமாக தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை மருந்துகளுக்கான முழுவதுமா என்பது குறித்து தெரியவில்லை.

Tomasz Nadolski-கிற்கு தொடர்ந்து வயிற்று வலி இருக்கும் என்பதால், 20 மணி நேரம் அவருக்கு டிரிப் போட்ட மாதிரியே இருக்கும், அதைத் தொடர்ந்து வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்துகளும் தரப்படும்.

இப்படி தொடர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வரும் இவரின் பாதம் முற்றிலும் மாறிவிட்டதாகவும், அதற்காக புதிய வடிவ ஷு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன.

என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்க முடியாது உடலில் அனைத்து பாகங்களும் வலிக்கும் என்று அந்த இளைஞர் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்