இடிந்து விழுந்த மேம்பாலம்! 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இத்தாலி நாட்டில் Genoa நகரில் அடித்த புயலில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானதோடு இன்னும் ஏராளமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டு சில ஆற்றிலும் சில கட்டிடங்கள் மீதும் சில ரயில் பாதையிலும் சென்று விழுந்தன.

இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என்பதால் தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இடிபாடுகளுக்கிடையிலிருந்து இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சோக சம்பவம் இத்தாலியையும் பிரான்சையும் பல சுற்றுலாஸ்தலங்களையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.

இத்தாலிய விடுமுறை ஒன்று அடுத்து வருவதால் அந்த பாலத்தில் வழக்கத்தைவிட அதிக போக்குவரத்து இருந்திருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்