இதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

குழந்தை பிறப்பது கடினம் என மருத்துவர்கள் அனைவரும் எச்சரித்து வந்த நிலையில், பெண் ஒருவர் இதய வடிவ கருப்பையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் Moscow நகரத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர், இதய வடிவிலான கருப்பையை கொண்டிருந்துள்ளார்.

அவர் கர்பமடைந்திருக்கும் போது, ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர்கள் குழந்தையை பெற்றெடுத்தால் பெரும் ஆபத்தை சந்திக்கவிருக்கும் என எச்சரித்தனர்.

அதன்பின்னர் நினைத்தாலும் குழந்தை பெற வாய்ப்பிருக்காது எனவும் கூறியுள்ளனர். ஆனால் ஒரு சில மருத்துவர்கள், பெரிய அளவில் ஆபத்து எதுவும் ஏற்படாது ஆனால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு என கூறியுள்ளனர்.

ஒவ்வொருவரின் கருத்தும் ஒருவிதமாக இருந்தாலும் ஒருவழியாக அந்த பெண் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், பிறந்த குழந்தை இரண்டு பேருமே நலமுடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணுக்கு 3 கிலோ எடையில் Evgeny என்ற ஆண் குழந்தையும், 2.72 கிலோ எடையில் Varvara என்ற குழந்தையும் பிறந்துள்ளார்.

தாய், சேய் மூன்று பேருமே தற்போது நலமாக உள்ளார். உலகில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற அதிசயம் நடக்கும் என தெரிவித்தார்.

மேலும், உலக மக்களின் பார்வைக்காகவே கருப்பையினை வெளியில் வைத்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு பின்னர் உள்ளே வைத்து விட்டோம்.

சம்மந்தப்பட்ட பெண் விரும்பினால் இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்