நாடாளுமன்ற ஊழியரின் கோட்டை இரவல் வாங்கிய பிரதமர்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் அதிகாரபூர்வ புகைப்படத்துக்காக நாடாளுமன்ற ஊழியரின் கோட்டை நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்கவிருக்கும் இம்ரான் கான் இரவல் வாங்கியுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொள்வதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்திருந்தனர்.

புதிதாக தெரிவாகியுள்ள எம்.பி.க்கள் அங்கு வழக்கமாக நுழைய அடையாள அட்டை பெறவேண்டியதும் அவசியம் ஆகும்.

இதையொட்டி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்நாட்டின் நாடாளுமன்ற விதிமுறைப்படி எம்.பி.க்கள் சட்டைக்கு மேலாக கோட் அணிந்தே புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான்கான் நாடாளுமன்றம் வந்தபோது சல்வார் உடை அணிந்திருந்தார்.

அதிகாரபூர்வ புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க நினைத்தபோது, தன்னிடம் கோட் இல்லை என்பதை அறிந்தார்.

அப்போது நாடாளுமன்ற ஊழியர் ஒருவர், தான் அணிந்திருந்த கறுப்பு நிற கோட்டை கழற்றி இம்ரான் கானுக்கு இரவலாக கொடுத்தார்.

மேலும் அவருக்கு அதை அணிவிக்கவும் செய்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த, இருக்கையில் உட்கார்ந்து இம்ரான்கான் புகைப்படத்துக்கு உற்சாகமாக போஸ் கொடுத்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்