காதலனுக்காக அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் இளவரசி!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரான இளவரசி மாகோ, சாதாரண குடிமகன் ஒருவரை மணப்பதன் மூலம் தற்போது அரச குடும்பத்தை விட்டு வெளியேறவிருக்கிறார்.

பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியான 25 வயதாகும் இளவரசி மாகோவுக்கும், அதே வயதை சேர்ந்த சட்ட நிறுவன ஊழியரான கே கொமுரோவுடன் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயமானது.

ஜப்பானின் ஏகாதிபத்திய சட்டத்தின்படி, சாதாரண குடிமகனை மணந்தால் இளவரசி அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும்.

தற்போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நடக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ திருமண நிச்சயதார்த்தம் நேற்று டோக்கியோவில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.

இளவரசி அயகோ தாய் ஹிசாகோவுடன், நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றார். மணமகன் மோரியா, திருமண உடை மற்றும் பரிசுப் பொருட்களை இளவரசி அயகோவுக்கு அனுப்பி வைத்தார். அதனை இளவரசியின் தாயார் ஹிசாகோ முறைப்படி பெற்றுக் கொண்டார்.

இளவரசி மாகோ(25), டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் ஒன்றாக படித்த கீ கொமுரோ என்ற இளைஞரை காதலித்துள்ளார்.இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததையடுத்து, இவர்களது திருமணத்துக்கு அரச குடும்பம் சம்மதம் தெரிவித்ததையடுத்து இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதுகுறித்து மாகோ கூறியதாவது, இளவரசியாக இருக்கும் நான் சாதாரண நபரை திருமணம் செய்துகொண்டால் எனது இளவரசி அந்தஸ்து போய்விடும் என்பது எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.

ஆனால், எங்கள் இருவரின் மனம் ஒத்துப்போய்விட்டால் அந்த அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை, தற்போது வரை அரச குடும்பத்தில் எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்