பிறந்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்த கொடூர தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

South Carolina-வில் இளம்பெண் ஒருவர், தான் காரில் பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் வைத்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

South Carolina-வை சேர்ந்த Brennan Hailey Geller (21) என்ற இளம்பெண் அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிமையன்று, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் காரிலேயே குழந்தை பெற்றுள்ளார்.

அந்த குழந்தையினை இரக்க்கமின்றி கொலை செய்த அவர், பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, அதிகமான ரத்தப்போக்கின் காரணமாக அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர பிரிவில் தீவிர சிகிச்சை பெற்ற Geller-டம் குழந்தை மருத்துவர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Geller-ரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் தொடர்ந்து குழந்தை குறித்த எந்தவித தகவலையும் அளிக்காததால் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதில், காரில் அடிப்பகுதியில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலிருப்பதை பொலிஸார் கண்டறிந்து Geller மீது வழக்கு பதிவ செய்தனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் பொலிஸார், Geller-க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

இதுகுறித்து Geller-ன் நண்பர்கள் பலரும் தங்களுடைய முகப்புத்தகத்தில், அவள் கர்ப்பமாக இருந்ததை எங்கள் அனைவரிடமும் இருந்து மறைத்துவிட்டாள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்