சீன சாலையில் ராட்சதப் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் கார்கள்! நடந்தது என்ன?

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

வடக்கு சீனாவின் முக்கிய சாலையொன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ராட்சதப் பள்ளத்தால் அவ்வழியாகச் சென்ற கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்த சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் சுமார் 86 சதுர அடி அளவுக்கு ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது.

அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இந்நிலையில் இதில் ஒரு கார் பள்ளத்தில் விழுந்தது. பின் அதைத் தொடர்ந்து வந்த காரின் ஓட்டுநரும் பள்ளத்தை கவனிக்காததால், முன் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாய்ந்த பிறகு பிரேக்கை அழுத்த அது பலனில்லாமல் போனது. 3 வது கார் ஓட்டுநர் சற்று முன்னதாக பிரேக்கை அழுத்த அவரது கார் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாயாமல் தடுக்கப்பட்டது.

மேலும் பள்ளத்தில் விழுந்த கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் விளைவாக, இந்த ராட்சதப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்