ஆவியால் 15 வருடங்களாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஆவி புகுந்ததாக கூறி 12 வயது சிறுமி 15 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2003-ம் ஆண்டு Bajugan என்று கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று Tolitoli regency பகுதியில் அந்த பெண்ணை கண்டறிந்தனர்.

தற்போது 28 வயதாகும் அந்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், இறந்த தன்னுடைய காதலன் Amrin ஆவி, JG என்ற 83 வயது முதியவரின் உடலில் புகுந்துள்ளதாக கூறி, தினமும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆவிகள் மற்றும் அமானுஷ்யம் பற்றிய செய்திகளில் அதிக ஈடுபாடு கொண்ட இந்தோனேசியாவில், முதியவரின் பேச்சை கேட்டு அந்த சிறு வயதில் பெண்ணும் ஏமாற்றம் அடைந்து இத்தனை வருடங்களாக உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கினை நேற்று விசாரித்த நீதிபதி, சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி JG-க்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்