விமான நிலையம் அருகே வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர்: 55 பேர் படுகாயம்... அதிர்ச்சியளிக்கும் காணொளி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் விமான நிலையம் அருகே கார் மோதியதில், பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தாலியின் Bologna விமான நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் மீது கார் ஒன்று வேகமாக மோதியதில் பெரும் சத்தத்துடன் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு படையினர் தீயை அணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு, விபத்தில் காயமடைந்த 55 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோவை காண...

மேலும் இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் சாலை முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்