போலியான கண் இமைகளை பயன்படுத்திய இளம்பெண்: ஒரு கண்ணை இழந்த வீடியோ காட்சி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலியான கண் இமைகளை பயன்படுத்தியதால் ஒரு கண் தெரியாமல் உதவிக்கு அழைப்பதை போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகவே பெண்கள் தாங்கள் அழகாக காட்சியளிக்க பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர், இதனால் பின்வரும் நாட்களில் ஒவ்வாமை மற்றும் தோல்வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என அனுபவித்த பெண்களே கூறினாலும், இக்காலத்தில் பெண்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

வீடியோவை காண...

அந்த முக அலங்காரங்களில் ஒன்று தான் eyelashes எனப்படும் செயற்கை கண் இமை வரிசையை பொருத்தி கண்களை அழகுபடுத்தி காட்டுவது.

இதனை முதலில் சீனா நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அது உலகம் முழுவதும் உள்ள பெண்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிரேசிலின் São Paulo பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலியான கண் இமைகளை பயன்படுத்தியதால், ஒரு பக்க கண் முழுவதும் மூடிக்கொண்டு உதவிக்கு அவரது தாயை அழைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதற்கு அவரது தாய், உன்னை யார் இதெல்லாம், பயன்படுத்த சொன்னது. எனக்கெல்லாம் தெரியாது அனுபவி என கோபமாக கடிந்து கொள்கிறார்.

அதற்கு அந்த இளம்பெண் சிரித்துக்கொண்டே, இப்படியெல்லாம் செய்தால் தான் காதலன் கிடைப்பான் என கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்