சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 12 மரண தண்டனை பெற்ற காமுகன்: நீதிமன்றம் அதிரடி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ள காமுகனுக்கு 12 மரண தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். குறித்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதில் 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்