அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த அதிர்ச்சி செயல்! புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய கொடுமை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் அறுவை சிகிச்சையின் இடையில் செல்பி எடுத்து இன்ஸ்டா கிராம பக்கத்தில் பதிவேற்றம் செய்த மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜெண்டினாவின் Buenos Aires பகுதியில் San Jose என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, இடையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், செவிலியர் ஆகியோர் ஒன்றாக நின்று செல்பி எடுத்துள்ளனர்.

அது தொடர்பான புகைப்படத்தை Lorena Olguín என்ற பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள், அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Lorena Olguín அங்கிருக்கும் மருத்துவமனையில் gastroenterology மருத்துவராக உள்ளார்.

அன்றைய நாள் அதிக அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அறுவை சிகிச்சை தொடர்பாக புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போது, செல்பி குறித்து பேசியதாகவும், அப்போது தான் புகைப்படங்கள் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதில் புகைப்படங்கள் நன்றாக இருந்த காரணத்தினால் பதிவேற்றம் செய்துவிட்டேன். தற்போது அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் சார்பில் கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது செல்பி எடுத்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மருத்துவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி புகைப்படத்தில் இருந்த இரண்டு துணை செவிலியர்கள், anaesthesiologist மருத்துவர் மற்றும் செவிலியரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்