ஆபாச படத்திற்கு அடிமையான இளைஞன் கம்ப்யூட்டர் ஷோ ரூமில் செய்த அதிர்ச்சி செயல்: வெளியான சிசிடிவி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் ஆபாச படத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் ஷோ ரூமில் ஆபாச படம் பார்ப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Buriram பகுதியில் உள்ள Thawikit Supercenter-ல் ஸ்டூடியோ 7 என்ற கம்ப்யூட்டர் ஷோ ரூம் ஒன்று உள்ளது. இங்கு பல வகை லேப்டாப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த ஆப்பிள் லேப்டாப்பில் ஆபாச வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.

கடையில் ஊழியர்கள் மற்றும் அருகில் பலர் நடந்து செல்கின்றனர் என்பதை கூட கவனிக்காமல் தொடர்ந்து படத்தையே பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவரை கடந்து சென்ற அந்த கடையின் ஊழியர் இவர் படம் பார்ப்பதை பார்த்து, திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் அந்த கடையை விட்டு வெளியே செல்கிறார்.

இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாக, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்