காதலன் கொடுத்த கொடூர தண்டனை... நிர்வாணமாக உயிருக்கு போராடிய காதலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

Crimea தீபகற்பத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன்னுடைய காதலி மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த காதலன் கோபமடைந்து தீ வைத்து எரித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Crimea-வில் Yalta என்ற பகுதி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வருபவர் Alexandra Kuzima (19). இவர் கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய விடுமுறையை கழிப்பதற்காக peninsula சென்றிருந்தபோது, அங்கு Evgeny Bondaruk (24) என்ற இளைஞரை சந்தித்தார்.

நண்பர்களாக இருந்து வந்த இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியதோடு, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் நிச்சயிக்க பெற்றது.

இதற்கிடையில் Alexandra வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு நபருடன் பேசி கொண்டிருப்பதை பார்த்த Bondaruk, கோபத்துடன் வேகமாக வீட்டிற்கு வந்து மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பெட்ரோல் ஊற்றி எரித்தவர், திடீரென Alexandra மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த Alexandra நிர்வாணமாக, உதவி கேட்டு வெளியில் ஓடி வந்துள்ளார். இதனை பார்த்து பக்கத்து வீட்டு பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 80 சதவிகிதம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் Bondaruk-க்கும் கையில் லேசான காயமடைந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், Bondaruk-க்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்