கடித்த பாம்பை கையில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்: வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன்னைக் கடித்த பாம்பைக் கையில் சுற்றி எடுத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவமனைக்கு வந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவின் Pujing பகுதியில் 1.5 மீற்றர் நீளமுள்ள பாம்பு ஒன்று தன் கையில் சுற்றியிருக்க நிதானமாக மருத்துவமனைக்கு வந்த பெண்ணைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பாம்பு விஷமற்ற பாம்பு என்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ ஒன்றுடன் அந்தப் பெண்ணின் கையில் சுற்றியிருக்கும் பாம்புடன் சர்வசாதாரணமாக அவர் மருத்துவமனை படிவம் ஒன்றை நிரப்பும் படங்களும் வைரலாக சுற்றி வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்