கட்டாய திருமணம்... கணவரின் சித்திரவதையால் மரணமடைந்த 10 வயது சிறுமி: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட 30 வயது நபர், குறித்த சிறுமியை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவான அந்த கணவனை தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான Badghis-ல் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து Hameya என்ற 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.

சிறுமி Hameya ஆப்கானில் நடைமுறையில் உள்ள badal என்ற பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் திருமணத்திற்கு செலவிடும் தொகை குறையும் என்பது மட்டுமல்ல வரதட்சினை தொகையும் தர வேண்டியதில்லை.

இந்த நிலையில் Hameya குடும்பத்தில் நடந்த மரணத்தை அடுத்து அவரது கணவர் பழிவாங்கும் நடவடிக்கையாக தமது மனைவியி Hameya-ஐ தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சித்திரவதை தாங்காமல் சிறுமி Hameya கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பெண்களுக்கு உரிய வயதாகும் முன்னரே கட்டாய திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்