துபாயில் இந்தியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

துபாயில் நடைபெறும் லாட்டரி குலுக்கலில் இந்தியர்கள் தொடர்ந்து கோடிகளை பரிசாகப் பெற்று வருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் மேனன் குவைத்தில் பணிபுரியும் நிலையில் துபாயில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6.85 கோடி) பரிசாக கிடைத்தது.

துபாயில் வசிக்கும் சாந்தி போஸ் என்பவர் பிஎம்டபிள்யூ ஆர்9டி ஸ்கிரேம்பிளர் ரக மோட்டார் பைக்கை வென்றார். (இந்தியாவில் இதன் மதிப்பு சுமார் ரூ. 16.32 லட்சம்).

இதுகுறித்து சந்தீப் மேனன் கூறுகையில், எனது வாழ்நாளில் நான் எந்தப் பரிசையும் வென்றதில்லை. ஆனால் தற்போது நான் கற்பனை செய்ய முடியாத பரிசுத் தொகையை வென்றுள்ளேன் என கூறியுள்ளார்.

அதாவது துபாய் டியூட்டி ஃபிரீ எனப்படும் இந்த லாட்டரி பரிசுத் திட்டம் கடந்த 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது முதல் தற்போது வரை 132 இந்தியர்கள் பரிசு பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு சுமார் ரூ. 13 கோடி பரிசு கிடைத்தது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு சுமார் ரூ. 22 கோடி பரிசாகக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்