திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் தொடர்பு: ஊர் மக்கள் கொடுத்த தண்டனை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் திருமணமான ஆணும், பெண்ணும் கள்ளக்காதலில் ஈடுபட்ட நிலையில் ஊர் மக்கள் அவர்களுக்கு பொதுவெளியில் தண்டனை கொடுத்துள்ளனர்.

இளைஞர் ஒருவருக்கும், டிகே (30) என்ற பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ள நிலையில் அதை ஊரார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் சாக்கடைக்கு அருகில் அரை நிர்வாணமாக உட்காரவைத்தார்கள்.

பின்னர் அங்கிருந்த நபர் சாக்கடையிலிருந்து கழிவுநீரை பக்கெட்டில் எடுத்து இளைஞர் மற்றும் டிகே உடல் முழுவதும் ஊற்றினார்.

தாங்கள் செய்த தவறு குறித்து இருவரும் சரியாக விளக்கமளிக்காத நிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என கூறினார்கள்.

ஆனால் சரியான ஆவணங்களை அவர்கள் காட்டவில்லை என கூறி மக்கள் அதை ஏற்கவில்லை.

இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்