திருமணம் ஆகாமல் தவித்த இளைஞர்: இறுதியில் அடித்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய பணமில்லாமல் தவித்த நிலையில் லாட்டரியில் விழுந்த $250,000 பரிசு அவர் பிரச்சனையை தீர்த்துள்ளது.

பிரடிரிக் ரிச்சட்சன் என்பவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய நினைத்தார்.

ஆனால் திருமண நிகழ்வை செய்ய போதுமான பணம் ரிச்சட்சன் இல்லாத நிலையில் காதலியை கரம்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் ரிச்சட்சன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு $250,000 பரிசு விழுந்துள்ளது. இது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிச்சட்சன் கூறுகையில், திருமணம் செய்ய முடியாமல் கவலையில் இருந்த எனக்கு பரிசு விழுந்துள்ளது.

இதை வைத்து என் கனவு திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்துவேன்.

முதலில் $5 அல்லது $50 பரிசு விழுந்துள்ளதாக நினைத்தேன், ஆனால் $250,000 பரிசு விழுந்தது என தெரிந்தபோது அழுகையே வந்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்