வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்: 100 பயணிகளின் நிலை என்ன?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோ நாட்டில் Aeromexico விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் Durango பகுதியில் அமைந்துள்ள குவாடலூப் விக்டோரியா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவத்தை அடுத்து துரித மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள Durango மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் ஆபத்து இல்லை எனவும், காயங்களுடன் 80 பயணிகள் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 97 பயணிகளுடனும் 4 விமான ஊழியர்களுடனும் குறித்த விமானம் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் விழுந்த பகுதியில் இருந்து கரும்புகை மேலெழும்பிய நிலையில் உள்ளது. மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான காலநிலையே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்