அரச குடும்பத்துக்கு சொந்தமான கிரீடம் கொள்ளை: தேடுதல் வேட்டையில் பொலிசார்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்வீடன் அரச குடும்பத்துக்கு சொந்தமான கிரீடம் உள்ளிட்ட நகைகளை கும்பல் ஒன்று கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விசைப்படகில் மாயமான குறித்த கும்பலை தேடி பொலிசார் விரைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஸ்வீடனில் அமைந்துள்ள Strängnäs பேராலயத்தில் இருந்தே மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மன்னர் கார்ல் IX மற்றும் ராணியார் கிறிஸ்டினா ஆகியோரது கிரீடங்களும் மன்னர் பயன்படுத்தும் மேலங்கி ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஆனால் தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மன்னர் கார்ல் IX 1611 ஆம் ஆண்டு இறக்கும் வரை ஸ்வீடனின் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளார்.

அவரது கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இந்த கிரீடங்கள் பின்னர் வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஸ்வீடன் அரச குடும்பத்து நகைகள் கொள்ளையிடப்படுவது இது முதன் முறையல்ல.

கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசி கிறிஸ்டினாவுக்கு சொந்தமான நகைகள் சுமார் 102,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான நகைகளை 19 வயது இளைஞர் ஒருவர் இரண்டு மாத காலமாக திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்