அமேசான் காடுகளின் கடைசி ஆதிவாசி குறித்து வெளியான புதிய புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

விவசாயிகளால் கொல்லப்பட்ட அமேசான் காடுகளின் ஆதிவாசி இனமொன்றின் கடைசி ஆதிவாசியின் வீடு மற்றும் அவரது ஆயுதங்கள் போன்றவை குறித்த புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குழி மனிதன் என்று அழைக்கப்படும் அந்த மனிதன் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்துள்ளான்.

அவனுடைய குடிசைக்குள் மூங்கில் கம்புகள், மர ஈட்டி ஒன்று ஆகியவை இருப்பதை படங்கள் காட்டுகின்றன.

அதே போல் விலங்குகளை பிடிப்பதற்காகவும் எதிரிகளிடம் இருந்து ஒளிந்து தப்புவதற்காகவும் தோண்டப்பட்ட ஒரு குழியும் காணப்படுகிறது.

அவனை தொந்தரவு செய்யாமல் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவனது முகமும் லேசாக தெரிகிறது.

ஒரு வில் மற்றும் அம்புகளின் உதவியால் அவன் பன்றிகள், பறவைகள் மற்றும் குரங்குகளை வேட்டையாடி சாப்பிட்டுள்ளான்.

தனி மனிதனாக ஒரு காட்டுக்குள் அவன் வாழ்ந்து வந்த வாழ்க்கை வியப்பளிப்பதாக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்