12 அடி நீளமுள்ள கொடிய மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடிய 5 வயது சிறுமி! தந்தை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐந்து வயது சிறுமி ஒருவர் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடுவது தொடர்பான வீடியோவை அவரது தந்தை வெளியிட்டுள்ளதால், அதைக் கண்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவை தற்போது வரை 2,042,984-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், இந்த 5 வயது சிறுமி இருக்கும் வீட்டில் இரண்டு மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், அதில் ஒன்றின் பெயர் Sonny எனவும் மற்றொன்றின் பெயர் Cher எனவும் தெரிவித்துள்ளது.

இதில் 12 அடி நீளமுள்ள Sonny என்ற மலைப்பாம்புடனே அந்த 5 வயது சிறுமி கொஞ்சி விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது.

இதைக் கண்ட இணையவாசிகள் இது நல்லதிற்கு கிடையாது எனவும் என்றாவது ஒரு நாள் இது ஆபத்தில் போய் முடியும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் Hampshire-ல் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தன்னை வளர்த்து வந்த 31 வயது மதிக்கத்தக்க நபரை வீட்டில் நெருக்கி கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்