கார் ஓட்டும்போது முத்தம் கொடுத்த தம்பதியினர் கைது!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சவூதி அரேபியாவில் முத்தம் கொடுத்துக் கொண்டே கார் ஒட்டிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியால் பெண்கள் கார் ஒட்டக்கூடாது என்றிருந்த சட்டத்திற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதனை நீக்கி பெண்களும் இனி கார் ஓட்டலாம் என்ற சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து சவூதி பெண்கள் பலரும் தாங்கள் கார் ஓட்டுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் ஒருவருக்கு கார் ஓட்டுவது பற்றி கற்று கொடுத்துக் கொண்டிருக்கும்போதே கணவர் முத்தம் கொடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர்களை கைது செய்து அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒருவர், ஒரு மனிதனை அவனுடைய காதலிக்கு முத்தம் கொடுப்பதால் என்ன பிரச்னை ஏற்பட போகிறது? ஒருவேளை அவர்கள் புதுமண தமபதிகளாக இருந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாகி அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இருந்த கடுமையான சட்டங்களை, இளவரசர் Mohammad Bin Salman Al Saud தளர்த்தி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்