5 ஆண்களுடன் திருமணம் 54 வயதில் குழந்தை தேவையா? விமர்சனத்திற்கு ஆளான நடிகை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

டென்மார்க் நாட்டை சேர்ந்த நடிகை பிரிகெட்டி நெல்சன் தனது 54 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை மட்டுமல்ல விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

இவருக்கு ஏற்கனவே, 5 நபர்களுடன் திருமணமாகி Julian (34) Kilian(28) Douglas(25) மற்றும் Raoul (23) என்ற நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு இத்தாலி மொடலான 39 வயதுடைய Mattia Dessi என்பவரை 5 ஆவதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 5 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர், 54 வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது விமர்சனங்களை எழுப்பியதையடுத்து, பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை விமர்சிப்பவர்கள், 60 முதல் 70 வயதுள்ள ஆண்கள் தந்தையாவது பற்றி ஏன் விமர்சிப்பதில்லை? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது அனைவருக்கும் பிடிக்காது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் இது என்னுடைய வாழ்க்கை, எனக்கும், என் கணவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது, குழந்தை பெற்றுக் கொள்வது, வளர்ப்பது பற்றி நாங்கள் இருவரும் முடிவு செய்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Our precious little Frida, our true love. ❤️

A post shared by Brigitte Nielsen (@realbrigittenielsen) on

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்