வடகொரியாவில் அமெரிக்க மாணவருக்கு நேர்ந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய சிறையில் ஓராண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்த அமெரிக்க மாணவன் பல முறை தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடகொரிய சிறையில் கடும் சித்திரவதை அனுபவித்து வந்த 22 வயது அமெரிக்க மாணவன் Otto Warmbier கடந்த ஆண்டு ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி அமெரிக்க திரும்பிய சில நாட்களிலையே அவர் மரணமடைந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் விவாத பொருளானது.

இந்த நிலையில் குறித்த மாணவருக்கு வடகொரிய சிறையில் என்ன நேர்ந்திருக்கும் என்பது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

மாணவன் ஓட்டோ உடலளவில் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறும் விசாரணை அதிகாரிகள்,

இதனால் அவரது மூளை நிரந்தரமாக சேதமடைந்து, அதுவே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

அவரது மூளை சேதமைடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது, அவருக்கு வழங்கப்பட்ட உணவு எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர் அமெரிக்கா திரும்பிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது மூளை சேதமடைய உணவு காரணமல்ல என தெரியவந்தது.

முன்னதாக மூளை சேதமடைந்தது தொடர்பாக அவர் வடகொரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவான பின்னரும், அவரது தேர்தல் பிரசார காலத்திலும் மாணவர் ஓட்டோவின் விடுதலை தொடர்பில் விவாதிக்க தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அது முடியாமல் போனதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்