பள்ளிக்கூடத்திலேயே திருமணம் செய்து கொண்ட மாணவன் மற்றும் மாணவி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் பள்ளிக்கூடத்திலேயே மாணவன் மற்றும் மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள உயர்நிலை பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் தீவிரமாக காதலித்து வந்த நிலையிலேயே இத்திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒலஜுமோக் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் மாணவன் மற்றும் மாணவிக்கு திருமணம் நடந்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாகியுள்ளது.

அந்த பதிவில், உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியும் இந்த திருமணம் மூலம் உங்களுக்கு கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்