அதில் ஆபாசம் ஏதும் இல்லை! வைரலான காதலர்களின் முத்தம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் மழைநீரில் காதலர்கள் முத்தமிட்டு கொண்டிருக்கும் புகைப்படத்தால் அப்புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் காதலர்கள் இருவர், பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனை அவ்வழியாக சென்ற புகைப்படக்காரர் ஜிபோன் அகமது, அழகாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ஒரு தரப்பினரிடம் இருந்து வரவேற்பும், பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியள்ளன. முஸ்லீம்கள் வாழும் வங்கதேசத்தில் இந்த புகைப்படம் அதிக வெறுப்பினை சம்பாதித்துள்ளது.

முன்னதாக மறைமுகமாக இருந்த காதலர்கள், தற்போது இதையெல்லாம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து புகைப்படக்காரரான அகமது, வாஷிங்டன் கூறியதாவது, நல்ல புகைப்படம் எடுக்க தேடியபோது, இந்த காட்சி எனது கண்ணில் பட்டு அதனை கிளிக் செய்து எனது எடிட்டருக்கு அனுப்பினேன். ஆனால், இதனை வெளியிட்டால் எதிர்மறை கருத்துக்கள் வரும் என கூறி வேண்டாம் என கூறிவிட்டார்,

இதனால் நான் எனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தேன், பதிவேற்றம் செய்த ஒரு மணிநேரத்தில், 5,000 ஷேரானது. ஆனால் அடுத்த நாளே சக புகைப்படக்காரர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். என்னைப் பொருத்தவரை அந்தப் புகைப்படத்தில் ஆபாசமும் இல்லை. இது ஒரு உண்மையான காதல்.

புத்தகத்தை படித்த மக்கள், வாழ்க்கையை படிக்கவில்லை, இது எனக்கு வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்