மனைவியுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி போட்ட குத்தாட்டம்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முசரப், தன் மனைவியுடன் போட்ட குத்தாட்டம் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து வந்தவர் பர்வேஷ் முசரப். இவர் தான் பதவி வகித்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் பலம் வாய்ந்த ஒருவராக வலம் வந்தார்.

ஆனால் தற்போது இவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இக்குறையை போக்கும் வகையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமித் மிர் தனது டுவிட்டர் பக்கத்தில் முசரப்பின் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் அவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கானுக்கு சவால் விடும் விதமாக ஆடியிருப்பதாகவும், முசரப் இனியும் முதுகு வலியால் அவதிப்படமாட்டார் என்று நினைப்பதாகவும், இன்னும் சில வாரங்களில் வெளியில் வந்துவிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments